மொழி என்பது மனிதனை அடையாளப்படுத்தும் பண்பாட்டுக் கூறுகளில் ஒன்றாகும். மொழி தானும் வளர்ந்து, தன்னைப் பயன்படுத்தும் மனிதனையும் வளர்க்கும் தனியாற்றல் பெற்றது. எண்ணத்தின் வடிவமாகவும் நாகரிகத்தின் சின்னமாகவும் திகழும் மொழி, மனிதகுலத்தின் கருத்துப் பரிமாற்றத்தை செய்வதோடு மனித சமுதாய இணைப்புக்கும் துணை செய்கின்றது.